#BREAKING: டெல்லி வன்முறை :எ ஃப் .ஐ .ஆர் பதிவு செய்ய முடியாது -போலீஸ்.!

இன்று டெல்லி உயர்நீதிமன்றம் டெல்லி வன்முறை தொடர்பாக போலீசாருக்கு சில கேள்விகளை எழுப்பியது.அதில் வன்முறையை  தூண்டும் வகையில் பேசிய தலைவர்கள் மீது எ ஃப் .ஐ .ஆர் பதிவு செய்யதது ஏன் என கேள்வி எழுப்பியது.

அதற்கு பதிலளித்த டெல்லி  போலீசார்  தற்போதைய சூழலில் எ ஃப் .ஐ .ஆர் பதிவு செய்தால் இயல்பு நிலை திரும்ப எந்தவகையிலும் உதவாது என கூறினர்.

பதிலை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என டெல்லி  போலீசாருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அனைத்து வீடியோ பதிவுகளையும் அறிந்து வருகிறோம் அதன்படி அவர் பதிவு செய்ய இயலும் என டெல்லி  போலீசார் கூறியுள்ளனர்.

உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  வன்முறை தொடர்பாக இதுவரை 48 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெல்லி  காவல்துறை கூறியுள்ளனர்.

டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த வன்முறையில் காயமடைந்த 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk