டெல்லி உள்ளாட்சித் தேர்தல்! நோட்டாவுக்கு 57,000 வாக்குகள் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி உள்ளாட்சி தேர்தலில் நோட்டாவுக்கு 57,000 வாக்குகள் பதிவாகியுள்ளன என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு. 

டெல்லி நகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதை , டெல்லி மாநகராட்சியில் பாஜகவின் 15 ஆண்டுகால ஆதிக்கத்துக்கு ஆம் ஆத்மி முற்றுப்புள்ளி வைத்தது.

டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கான தேர்தலில் 130க்கும் இறப்பட்ட இடங்களில் ஆம் ஆத்மி அமோக வெற்றியை பதிவு செய்தது. பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 9 மற்றும் மற்றவை 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், டெல்லி மாநில தேர்தல் ஆணையம் (டிஎஸ்இசி) வெளியிட்ட தரவுகளின்படி, இந்த ஆண்டு டெல்லி உள்ளாட்சி தேர்தலில் நோட்டாவுக்கு 57,000 வாக்குகள் பதிவாகியுள்ளன என தெரிவிக்கப்ட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நோட்டாவுக்கு 8,000 வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இந்தாண்டு நோட்டாவுக்கு 57,000 வாக்குகள் பதிவாகியுள்ளன. அனைத்து வார்டுகளிலும் போட்டியிடாத பல அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகளை விட இந்த ஆண்டு நோட்டாவுக்குப் பதிவான ஒட்டுமொத்த வாக்குகள் அதிகம் என கூறியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment