மனைவியை வீட்டு வேலை செய்யச் சொல்வது கொடுமை அல்ல… டெல்லி ஐகோர்ட் அதிரடி!

Delhi High Court : மனைவி வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் என கணவர் எதிர்பார்ப்பதை கொடுமையாக கருத முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. விவாகரத்து வழக்கு ஒன்றில் கணவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றம் நீதிபதிகள் சுரேஷ் குமார் கைட் மற்றும் நீனா பன்சால் கிருஷ்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.

Read More – ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்து கூட்டணி.? ஒடிசா அரசியலில் பரபரப்பு.!

அப்போது நீதிபதிகள் கூறியதாவது, திருமணமான பெண்ணை வீட்டு வேலைகளை செய்யச் சொல்வதை வீட்டுப் பணிப்பெண்ணின் வேலைக்கு சமன் செய்ய முடியாது. ஏனெனில் அது அவருடைய குடும்பத்தின் மீதான அன்பு மற்றும் பாசமாக கருதப்படும். வாழ்க்கையின் எதிர்கால பொறுப்புகளை பகிர்ந்து கொள்வதே நோக்கமாகும். இதனால், மனைவி வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் என்று கணவர் எதிர்பார்த்தால் அது கொடுமை இல்லை.

Read More – குவாரிகளில் மணல் அள்ள ஒப்பந்த அனுமதி தரக்கூடாது… மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு!

அது ஒருவகையான அன்பு. கணவன் வீட்டின் நிதிப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறார், மனைவி வீட்டுப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். எதிர்மனுதாரர் வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தாலும், அதைக் கொடுமை என்று கூற முடியாது.  தனது குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ வேண்டும் என்று தனது மனைவியும் அவரது குடும்பத்தினரும் வலியுறுத்தியதாக கணவர் கூறியுள்ளார்.

இதற்கு நீதிமன்றம் கூறியதாவது, கணவனை குடும்பத்தை விட்டு பிரிந்து வாழச் சொல்வது, மனைவி செய்யும் கொடுமைக்கு சமம் என்று குறிப்பிட்டது. தனது வயதான பெற்றோரை கவனித்துக் கொள்ள ஒரு மகனுக்கு தார்மீக உரிமை மற்றும் சட்டப்பூர்வ கடமை உள்ளது.

Read More – LKG குழந்தைக்கு பாலியல் தொல்லை… பள்ளி ஆசிரியர்கள் கைது.!

திருமணத்திற்குப் பிறகு மகன் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து செல்வது இந்து கலாச்சாரத்தில் “விரும்பத்தக்கது” அல்ல எனவும் குறிப்பிட்டனர். இந்த வழக்கில், கடந்த 2010-ம் ஆண்டு முதல் கணவன், மனைவி தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும், மனைவிக்கு கூட்டுக் குடும்பமாக வாழ விருப்பம் இல்லை எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

கணவர் பல்வேறு முயற்சிகள் எடுத்தும், மனைவி தனது திருமண கடமைகளை புறக்கணித்தது மட்டுமில்லாமல், கணவர் மற்றும் பெற்றோரின் உரிமையை பறித்துவிட்டார் என கூறி, இந்து திருமணச் சட்டம், 1955 இன் பிரிவு 13(1) (ia) இன் கீழ் அந்த நபருக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம். அதாவது, மனைவியின் கொடுமையை காரணம் காட்டி டெல்லி உயர்நீதிமன்றம் கணவருக்கு விவாகரத்து வழங்கியது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment