தீபத் திருவிழா – 2700 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2,700 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு.

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு வரும் டிசம்பர் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2,700 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது.

பக்தர்களின் வருகையை பொறுத்து கூடுதல் பேருந்துகளை இயக்க தயாராக உள்ளதாகவும் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை தீபத் திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 6ம் தேதி தீபத்திருவிழா நடைபெற உள்ளது. இந்த நிலையில், டிசம்பர் 6 மற்றும் 7ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment