மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 92 ஆக அதிகரிப்பு..! சோகத்தில் பீகார்

பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரிப்பு.

பீகார் மாநிலத்தில் கன மழையின் போது மின்னல் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. பீகார் மாநிலத்தில் கடந்த இரண்டு , மூன்று நாள்களாக வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. பீகார் மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 83 பேர் மின்னல் தாக்கி இறந்திருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் கனமழை காரணமாக 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று பீகார் மாநிலத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் பலர் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 15 கால்நடைகளும் இறந்துள்ளன. இதை தொடர்ந்து இன்று 9பேர் இறந்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 92 ஆக அதிகரித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதிகபட்சமாக 13 பேர்  கோபால் கஞ்ச் பகுதியில் உயிரிழந்துள்ளார்கள், மேலும் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அவர்கள் அறிவித்துள்ளார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.