Connect with us

கேரளாவில் மூளை உண்ணும் கொடிய நோய் ..! 2 சிறுமி பலி..1 சிறுவனுக்கு தீவிர சிகிச்சை!

Brain Fever

இந்தியா

கேரளாவில் மூளை உண்ணும் கொடிய நோய் ..! 2 சிறுமி பலி..1 சிறுவனுக்கு தீவிர சிகிச்சை!

கோழிக்கோடு : கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியில் தற்போது அமீபிக் மூளைக்காய்ச்சல் எனப்படும் மூளை உண்ணும் கோடி நோய் பாதிக்கப்பட்டு 12-வயது சிறுவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், இந்த மே -5 தேதி போல கேரளாவில் உள்ள மலப்புறத்தில் இதே மூளைக்காய்ச்சல் நோய்க்கு 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகு 2-வதாக மே-21 ம் தேதி கண்ணுரை சேர்ந்த 13-வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

தற்போது, 3-வதாக கோழிக்கோடை சேர்ந்த 12-வயது  சிறுவன் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நோயினை குறித்து அந்த சிறுவனை சிகிச்சை புரியும் மருத்துவர்கள் கூறுகையில், “எங்கள் ஆய்வகங்களில் செய்யப்பட்ட சோதனைகளில் நாங்கள் இந்த தொற்று நோயைக் கண்டறிந்தோம்.

தேங்கி நிற்கும் தண்ணீரில் குளிப்பதையும், தண்ணீரில் மூழ்குவதையும் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். தீம் பார்க் மற்றும் நீச்சல் குளங்களில் உள்ள தண்ணீரை சுத்தமாக இருக்குமாறு குளோரினேட் செய்ய வேண்டும். சுத்திகரிக்கபடாத தண்ணீரால் தான் இந்த நோய் பரவுகிறது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பத்து பேரில் ஒருவர் மட்டுமே உயிருடன் பிழைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால், மிக கவனமாக நாம் இருந்து கொள்ள வேண்டும். தலை வலி, வாந்தி, கண்ணை திடீரென தொறக்க முடியாமல் போவது என இதனது அறிகுறிகள் சற்று தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்ததாகும்.

கோழிக்கோடு சேர்ந்த அந்த சிறுவனும் தற்போது தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறான். மேலும், நாங்களும் முழு முனைப்போடு சிறுவனுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்” என அந்த மருத்துவர் கூறி இருந்தார். இந்த சம்பவம் கேரளாவில் சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Continue Reading

More in இந்தியா

To Top