DC vs RR-IPL 2021:இன்று டெல்லி கேபிடல்ஸை வெல்லுமா ராஜஸ்தான் ராயல்?..!

ஐபிஎல் (DC vs RR):இன்றைய 36 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து டெல்லி கேபிடல்ஸ் விளையாடவுள்ளது.

ஐபிஎல் 2021 இன் 36 வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து இன்று மாலை 3.30 மணிக்கு ஷார்ஜாவில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரண்டாவது முறையாக விளையாடவுள்ளது.

முன்னதாக,இந்த இரு அணிகளும் விளையாடியபோது, ராஜஸ்தான் ராயல்ஸ் டெல்லி கேபிடல்ஸை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் ஒருவருக்கொருவர் 23 போட்டிகளில் விளையாடியுள்ளன, இதில் டெல்லி கேபிடல்ஸ் 11 போட்டிகளில் வென்றது, ராஜஸ்தான் ராயல்ஸ் 12 ஆட்டங்களில் வென்றது.  மேலும்,தற்போதைய சீசனில் டெல்லி கேபிடல்ஸ் இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 7 ல் வெற்றி பெற்று, தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மறுபுறம், ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை 8 போட்டிகளில் 4 வெற்றி பெற்றுள்ளது, தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் கடைசியாக துபாயில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் விளையாடியது.அதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. மறுபுறம், ராஜஸ்தான் ராயல்ஸ் கடைசியாக துபாயில் பஞ்சாப் கிங்ஸுடன் விளையாடியது.அப்போட்டியில்,ராஜஸ்தான் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கணிக்கப்பட்ட டெல்லி அணி: ஷிகர் தவான், பிருத்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (c), மார்கஸ் ஸ்டோனிஸ், சிம்ரான் ஹெட்மியர், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அவேஷ் கான், அன்ரிச் நார்ட்ஜே

பெஞ்ச்: இஷாந்த் சர்மா, ஸ்டீவ் ஸ்மித், லலித் யாதவ்.

கணிக்கப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி: எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (c), மஹிபால் லோமோர், லியாம் லிவிங்ஸ்டோன், ரியான் பராக், ராகுல் தேவாடியா, கிறிஸ் மோரிஸ், கார்த்திக் தியாகி, சேத்தன் சகரியா, முஸ்தாபிஜூர் ரஹ்மான்

பெஞ்ச்: க்ளென் பிலிப்ஸ், டேவிட் மில்லர், சிவம் துபே.

 

Recent Posts

நாசாவின் கடைசி கட்ட சோதனை! கனேடியருடன் விண்வெளி பறக்கும் இந்திய பெண் !!

NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…

1 hour ago

ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு.! பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர்.!

Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…

2 hours ago

தைராய்டு பிரச்சினையை விரட்டி அடிக்கும் தனியா விதைகள்..!

தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…

2 hours ago

மும்பையில் அசராத கோட்டையை கட்டிய ரோஹித்! கோட்டை விட்ட ஹர்திக் பாண்டியா ?

Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…

2 hours ago

விஸ்வரூபமெடுக்கும் பாலியல் புகார்.! பிரஜ்வலுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்.?

Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…

3 hours ago

அஜித் சாரை சந்தித்தேன் அட்வைஸ் பண்ணாரு! சீக்ரெட்டை உடைத்த நிவின் பாலி

Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…

3 hours ago