எதற்கும் துணிந்தவன் VS யானை.! வெளியான சூப்பர் தகவல்.!

எதற்கும் துணிந்தவன் படமும், யானை திரைப்படமும் டிசம்பர் மாதம் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. 

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்துள்ள திரைப்படம் “எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். படத்தில், ராதிகா, சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

etharkum thuninthavan

இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுவென நடந்து வரும் நிலையில், படத்தை விரைவில் முடித்து விட்டு படத்தை வரும் டிசம்பர் மாதம் வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

இந்த நிலையில், இதைபோல் நடிகர் அருண் விஜய் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுவென  முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

suriya vs arun vijay

இதனையடுத்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படமும், அருண் விஜயின் யானை திரைப்படமும் டிசம்பர் மாதம் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதனால் ரசிகர்களுக்கு மத்தியில் இரண்டு படங்களின் மீதுள்ள

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.