அடடே.! முருங்கைக்காயை வைத்து சாம்பார் பொடி கூட செய்யலாமாம்.!

முருங்கைக்காய்– முருங்கைக்காய் சாம்பார் பொடி செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்

தேவையான பொருட்கள்:

  • துவரம்பருப்பு =3 ஸ்பூன்
  • கடலைப்பருப்பு =3 ஸ்பூன்
  • சீரகம் =1 ஸ்பூன்
  • மிளகு =1 ஸ்பூன்
  • மல்லி =1 ஸ்பூன்
  • பூண்டு =10 பள்ளு
  • காய்ந்த மிளகாய் =6
  • மஞ்சள் தூள் =1 ஸ்பூன்
  • பெருங்காயம் =1 ஸ்பூன்
  • முருங்கை காய் =20-25

செய்முறை:

முருங்கைக்காயை தோலை நீக்கி அதில் உள்ள சதை மற்றும் விதை பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். அதை வெயிலில் நன்கு காய வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம், மல்லி, பூண்டு ,காய்ந்த மிளகாய் ஆகியவற்றை பொன்னிறமாக மணம்  வரும் வரை வறுத்து  கொள்ளவும்.

பிறகு காய வைத்து எடுத்து வைத்துள்ள முருங்கைக்காயையும் லேசாக வறுத்து கொள்ளவும், அதனுடன் சிறிது கருவேப்பிலையும் சேர்த்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் நன்றாக ஆறவைத்து பெருங்காயம் ,மஞ்சத்தூள் சேர்த்து  மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். இப்போது கமகமவென முருங்கைக்காய் சாம்பார் பொடி தயார்.

அரைத்த பொடியை  நன்கு ஆறவைத்து  ஒரு டப்பாவில் சேகரித்து வைத்து விட்டால் நம் சாம்பார் வைக்கும் போது இதிலிருந்து இரண்டு ஸ்பூன் சேர்த்தால் முருங்கைக்காய் போட்டது போல் குழம்பு சுவையாக இருக்கும்.

முருங்கைக்காய்  கிடைக்கும் சீசனில் இவ்வாறு செய்து வைத்துக் கொள்ளலாம்.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.