அடடா…! இதுலயும் சமூக இடைவெளியா…? குச்சியை வைத்து மாலை மாற்றிய மணமக்கள்…! வீடியோ உள்ளே…!

ஒரு திருமண விழாவில், ஒரு தம்பதியினர், சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக, மூங்கில் குச்சியை வைத்து மாலையை மாற்றியுள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இருப்பினும் தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கப்பட, மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்  என்றும்,சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் ஒவ்வொரு மாநில அரசும் அறிவுறுத்தி வருகிறது. மீறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பீகாரின் பெகுசாரையில், ஒரு திருமண விழாவில், ஒரு தம்பதியினர், முகக்கவசம் அணிந்த வண்ணம், சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக, மூங்கில் குச்சியை வைத்து மாலையை மாற்றியுள்ளனர். இந்த வீடியோவை சத்தீஸ்கரின் கூடுதல் போக்குவரத்து ஆணையர் தீபன்ஷு கப்ரா தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த வீடியோ  இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.