அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளியாக மாறும் ஆம்பன் புயல் !

அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாகவும், நாளை காலையில் அதிதீவிர சூறாவளி புயலாகவும் தீவிரமடைய வாய்ப்புள்ளது என  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று மாலை(அதாவது 16-ம் தேதி )புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த புதிய புயலுக்கு “ஆம்பன்” என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆம்பன் புயல்  சூறாவளி புயலாக வேகமாக தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாகவும், நாளை(18-ம் தேதி) காலையில் அதிதீவிர சூறாவளி புயலாகவும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.

சூறாவளி புயலைக் கருத்தில் கொண்டு கடலோர மாவட்டங்களுக்கு “ஷ்ராமிக் ஸ்பெஷல்” ரயில்களை இயக்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு ஒடிசா அரசு   தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

author avatar
Castro Murugan