ஏப்ரல் 1 முதல் சுங்க கட்டண உயர்வு?..மக்களை வதைப்பது எந்த வகையில் நியாயம்? – தேமுதிக தலைவர் பரபரப்பு அறிக்கை!

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்.

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்க சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது வழக்கம். இந்தியா முழுவதும் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில், சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.ஒவ்வொரு ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.

சுங்க கட்டண உயர்வு:

tolltax10

இந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி ஏப்ரல் 1-ம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. சுங்க கட்டண உயர்வால் காருக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை  உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

பொதுமக்கள் மத்தியில் அச்சம்:

tollpepole10

தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், சுங்க கட்டண உயர்வால் தனியார் பேருந்துகளின்  கட்டணமும் உயரும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது.

விஜயகாந்த் வலியுறுத்தல்:

Vijayakanth requested giving sugarcane in the Pongal gift package

இந்த நிலையில், நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 1 முதல் உயர்த்தப்படும், சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஏப்ரல் 1 முதல் இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை விட 5 முதல் 10% வரை கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விழிபிதுங்கி நிற்கும் மக்கள்:

toll10

ஏற்கனவே மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி, பெட்ரோல் டீசல் விலை, சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். தற்போது சுங்க கட்டணமும் மேலும் உயர்த்தப்பட இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் சாமானிய மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும். சாலை வரி, வாகனங்களுக்கான காப்பீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் மக்கள் செலுத்தி வருகின்றனர்.

எந்த வகையில் நியாயம்?:

tollgate

ஆனால் நெடுஞ்சாலைகளில் உள்ள சாலைகள் தரமற்ற நிலையில் உள்ளன. பாஸ்டேக் முறை கொண்டு வந்த பிறகும் சுங்கச் சாவடிகளில் மக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதுபோன்ற சூழலில் கட்டணங்களை உயர்த்தி மக்களை வதைப்பது எந்த வகையில் நியாயம்?. வட மாநிலங்களில் பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிப்பதில்லை.

திரும்ப பெற வேண்டும்:

The work should be done permanently - vijayakanth

அதேபோல் தமிழகத்திலும் நெடுஞ்சாலை பராமரிப்பு இல்லாத சுங்கச்சாவடிகளை உடனடியாக மூடுவதோடு, சுங்க கட்டணங்களையும் முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். மக்கள் மீது மென்மேலும் சுமையை திணிக்காமல், சுங்க கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment