ஊரடங்கு நீட்டிப்பு? – மருத்துவ நிபுணர்களுடன் மீண்டும் இன்று முதல்வர் ஆலோசனை

மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பின் பொதுமுடக்கம் நீட்டிப்பு பற்றி அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் பொதுமுடக்கம் நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் இன்று மீண்டும் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பின் பொதுமுடக்கம் நீட்டிப்பு பற்றி அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர்களுடன் நேற்று ஆலோசனை நடத்திய நிலையில், இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுமுடக்கம் நீடிக்கப்படலாமா? நீட்டித்தால் என்ன தளர்வுகள் அளிக்கலாம்? என முதல்வர் ஆலோசிக்க உள்ளார். தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிப்பு பற்றி ஏற்கனவே முதல்வர் பழனிசாமி, கடந்த மே 25 ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்திருக்கிறார். இதற்குமுன் மருத்துவ குழு பரிந்துரையின்படி தமிழகத்தில் ஊரடங்கு 4 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்