#CUETUGResult2022: CUET – UG தேர்வு முடிவுகள் இன்றிரவு 10 மணிக்கு வெளியீடு!

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்றிரவு வெளியீடு என அறிவிப்பு.

CUET – UG தேர்வு முடிவுகள் இன்று இரவு 10 மணிக்கு வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 2022-23 கல்வியாண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் CUET என்ற பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது.  அதன்படி, மத்திய பல்கலைக்கழங்களில் இளநிலை படிப்பில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு ஆறு கட்டங்களில் கடந்த ஜுலை 15ம் தேதி முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள 259 நகரங்களில் நடைபெற்றது.

இதையடுத்து கடந்த செப்டம்பர் 8ம் தேதி இத்தேர்வின் உத்தேச விடைக்குறிப்பை (Provisional Answer Keys) தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருந்தது. நாடும் முழுவதும் சுமார் 45 மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான கியூட் நுழைவுத்தேர்வு 13 மொழிகளில் நடைபெற்றது. இந்த நிலையில், மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று இரவு 10 மணிக்கு வெளியிடப்பட இருக்கின்றன. CUET – UG தேர்வு முடிவுகள் வெளியானதும் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் மதிப்பெண் பட்டியலை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment