கிரிப்டோகரன்சி தடை செய்யப்பட வாய்ப்பு.?! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி கருத்து.!

ரிசர்வ் வங்கி மத்திய அரசிடம், கிரிப்டோகரன்சிக்கு கட்டுப்பாட்டு வரைமுறைகளை விதிக்க சொல்லி அறிவுறுத்தியுள்ளது. – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இந்தியாவில் கிரிப்டோகாரன்சி செயல்பாடுகள், அதன் மீதான அதீத முதலீடுகள் சமீபத்திய வருடஙக்ளில் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்த கிரிப்டோ கரன்சிக்கு எந்தவித பாதுகாப்பு வரைமுறைகளும் இல்லாத காரணத்தால் அரசு இதற்கு எதிரான நடவடிக்கைகளையே எடுத்து வருகிறது.

இது குறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘ ரிசர்வ் வங்கி மத்திய அரசிடம், கிரிப்டோகரன்சிக்கு கட்டுப்பாட்டு வரைமுறைகளை விதிக்க சொல்லி அறிவுறுத்தியுள்ளது. மேலும், கிரிப்டோகரன்சிக்கு தடைவிதிக்க ரிசர்வ் வங்கி கருதுகிறது. ‘ என்பது போல அவர் பேசியுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment