பசு படுகொலை விரைவில் தடை செய்யப்படும் – பாஜக தலைவர் சி.டி.ரவி

பசு படுகொலை விரைவில் தடை செய்யப்படும் கர்நாடகாவில் நிறைவேறும் என்று பாஜக தலைவர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மகாராஷ்டிரா, கோவா மற்றும் தமிழ்நாட்டில் கட்சி விவகாரங்களுக்குப் பொறுப்பான முன்னாள் கர்நாடக அமைச்சர் ட்விட்டரில், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் மாட்டு வதைக்கு தடை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.

இதனை தொடர்ந்து, இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பாஜக தலைவர் சி.டி.ரவி, “எதிர்காலத்தில் கர்நாடகாவில் பசு படுகொலை தடை ஒரு யதார்த்தமாக இருக்கும்.” இது குறித்து, கால்நடை பராமரிப்பு அமைச்சர் பிரபுசவன் பிஜேபியிடம், “கர்நாடக பசு படுகொலை தடுப்பு மற்றும் கால்நடை பாதுகாப்பு மசோதாவை” அமைச்சரவையில் நிறைவேற்றி வரவிருக்கும் சட்டமன்றத்தில் முன்வைக்குமாறு கேட்டுக் கொண்டேன். என்று ட்வீட் செய்துள்ளார்.

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் 20 மாநிலங்களில் தற்போது பசு  படுகொலையை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு சட்டங்கள் உள்ளது. அதாவது, மாடுகளை அறுக்க அல்லது விற்பனை செய்வதைத் தடைசெய்கின்றன. இதில், அருணாச்சல பிரதேசம், அசாம், கோவா, கேரளா, மிசோரம், மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை மாட்டு வதைக்கு எந்த தடையும் இல்லாத மாநிலங்கள்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.