கொரோனா சிகிச்சைக்கு இந்த மருந்தை பயன்படுத்த வேண்டாம்! WHO அதிரடி முடிவு!

கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகளின் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்து நீக்கம்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த, மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து பயனளிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை உலக சுகாதார நிறுவனம் நீக்கியுள்ளது.

இதுகுறித்து அவர்கள் கூறியுள்ளதாவது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7 ஆயிரத்திற்கு அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பல்வேறு மருந்துகள் குறித்து, உலக சுகாதார நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.அந்த ஆய்வில் ரெம்டெசிவிர் மருந்தை உபயோகித்ததால், நோயாளிகளின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டதற்கோ, உயிரிழப்புகளை கட்டுப்படுத்தியதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.

இதனையடுத்து, இந்த மருந்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் பட்டியலில் இருந்து, ரெம்டெசிவிர் மருந்த்தை உலக சுகாதார அமைப்பு நீக்கியுள்ளதாகவும், மேலும், இந்த மருந்து நோயாளிகளுக்கு சிறிதளவு நன்மை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும், உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த முடிவிற்கு பல மருத்துவ நிபுணர்கள் வரவேற்பு  தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.