இந்த 19 நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகள்.! தென் ஆப்பிரிக்கா, சீனா….

கொரோனா அதிகம் பரவி வரும் தென் ஆப்பிரிக்கா, சீனா உள்ளிட்ட 19 நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது புதிய வகை ஓமைக்ரான் வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஏற்க்கனவே இருக்கும் கொரோனா தாக்கமும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மத்திய மாநில அரசுகள் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்துள்ளன.

மத்திய அரசு மீண்டும் பழையபடி வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது, தென் ஆப்பிரிக்கா, சீனா உள்ளிட்ட 19 நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு மட்டும் இந்த புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதாவது, அந்த குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வருவோருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும். போன்ற புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.