செந்தில்பாலாஜிக்கு நீதிமன்ற காவல் 15-வது முறையாக நீட்டிப்பு..!

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. அதேநேரம் செந்தில் பாலாஜி ஜாமீன் குறித்து கீழமை நீதிமன்றத்தை மீண்டும் நாடலாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு…!

இதைத்தொடர்ந்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 2 முறை செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் 3-வது முறையாக செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், செந்தில் பாலாஜி  நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் மீண்டும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் இன்று முடிவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் ஆஜார்படுத்தபட்டார்.

அதிமுகவின் நம்பிக்கை துரோகி ஓபிஎஸ் – ஜெயக்குமார்

இதனையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜனவரி 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி தேதி 14-வது முறையாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிக்கப்பட்டு ஜனவரி 11-ம் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்த்தக்கது.

author avatar
murugan