தமிழக மீனவர்களுக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல்!

தமிழக மீனவர்கள் 8 பேரையும் மார்ச் 11-ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு.

எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 8 பேருக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழக மீனவர்கள் 8 பேரையும் மார்ச் 11-ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு விசைப்படகையும் அதிலிருந்து 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து கிளிநொச்சி கிராஞ்சி கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டது.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து விசாரணைக்கு பின் மீனவர்களை கிளிநொச்சி நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், தமிழக மீனவர்கள் 8 பேரை நீதிமன்ற காவலில் வைக்க ஆணையிடப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்