உணவு இடைவேளைக்காக வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை உணவு இடைவேளைக்கு பிறகு பகல் 1.45-க்கு தொடக்கம்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை உணவு இடைவேளைக்காக நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், இதுவரை 7 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்டு, தற்போது உணவு இடைவேளைக்காக 45 நிமிடம் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை உணவு இடைவேளைக்கு பிறகு பகல் 1.45-க்கு தொடங்க உள்ளது. எனவே, மீதமுள்ள 8 சுற்று வாக்கு எண்ணிக்கை 1.45 மணிக்கு தொடங்க உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 46116 வாக்குகள் பெற்று, 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 16,778 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment