இந்தியா என்றாலே ஊழலும், மோசமான சுற்று சூழலும் தான் நினைவுக்கு வருகிறது.! இன்போசிஸ் நிறுவனர் பேச்சு.!

இந்தியா என்றாலே தற்போது நினைவுக்கு வருவது ஊழல் தான். மேலும், இந்தியாவில் உள்ள மோசமான சாலைகள், மோசமான சுற்றுச் சூழல்தான் நினைவுக்கு வருகிறது என இன்போஸிஸ் நிறுவனர் தெரிவித்துள்ளார். 

பிரபல மென்பொருள் சேவை நிறுவனமான இன்போஸிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி அண்மையில், ஆந்திரா,  விஜயநகரம் மாவட்டத்தில் ராஜம்நகரில் தனியார் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் வெள்ளிவிழா ஆண்டு கொண்டாடபட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

அவர் பேசுகையில், இந்தியா என்றாலே தற்போது நினைவுக்கு வருவது ஊழல் தான். மேலும், இந்தியாவில் உள்ள மோசமான சாலைகள், மோசமான சுற்றுச் சூழல் மற்றும் மின்சாரம் இல்லாதது தான் நினைவுக்கு வருகிறது என பேசினார்.

மேலும், இதனை குறிப்பிட்டு இளம் தலைமுறையினர், சமூகத்தில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். என குறிப்பிட்டார். சுய நலத்தை விட, நாட்டு மக்கள், சமுதாயம் மற்றும் தேசத்திற்கு அதிகவற்றிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இவ்வாறு இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி கல்வி நிறுவன நிகழ்ச்சியில் பேசினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment