கார்ப்பரேட் நிறுவனங்கள் சி.எஸ்.ஆர் நிதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் – நிர்மலா சீதாராமன்

கடந்த சில மாதங்களாக இந்தியாவையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பானது, சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. மேலும், இந்தியாவிலும், 400-க்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

இந்நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்கள் சி.எஸ்.ஆர் நிதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மருத்துவ விளம்பரங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள், சுகாதாரம், பேரழிவு நிவாரணம் ஆகியவற்றிற்கு இந்த நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.