கோவை கொரோனா கர்பிணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது... தாய்-சேய் நலம் என மருத்துவர்கள் தகவல்....

தமிழகம் முழுவதும் பரவி வரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னமும்

By kaliraj | Published: May 10, 2020 12:36 PM

தமிழகம் முழுவதும் பரவி வரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னமும் குறைந்த பாடில்லை. இந்த கொரோனா வைரஸ் தொற்று பெரியவர், சிறியவர்,கர்ப்பிணி என எந்த பாகுபாடிறி அனைவரையும்  தாக்கும் பெருந்தொற்றாக அறிவித்து அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இந்நிலையில் தற்போது தான் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயமுத்தூரில், கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணி பெண்ணுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. கோயமுத்தூர், கரும்புக்கடை பகுதியை சேர்ந்த, 31 வயது கர்ப்பிணி பெண், இவர் கொரோனா பாதிப்புடன் கடந்த 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர்க்கு கொரோனா வார்டில் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர், நேற்றிரவு ஓர் அழகான  ஆண் குழந்தையை பெற்றுள்ளார். தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி, 218 பேர் கோயமுத்தூர் இ.எஸ்.ஐ.,மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். 

Step2: Place in ads Display sections

unicc