சிறப்பு இரயில்கள் மூலம் 4,50,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் சென்றுள்ளனர்…. அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்…

நம் நாட்டில் வேகமாக பரவிவந்த கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு முழு ஊரடங்கை அறிவித்தது. என்வே பல்வேறு மாநிலங்களுக்கு வேலை தேடி சென்ற மற்றும் பார்த்துவரும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல மிகவும் சிரமப்பட்ட நிலையில் இதற்கு மத்திய அரசு தீர்வு காண சிறப்பு இரயிலை இயக்க முடிவு செய்தது. இதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல்  அவர்கள் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பிரதமர் மோடியின் அறிவுறுத்தல்படி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக குறைந்த காலத்தில் 364 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டிருப்பதாக அந்த பதிவில்  குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,  இந்த சிறப்பு இரயில் மூலம் 4,50,000 பேர் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர், இன்னமும் சொந்த ஊர் திரும்பாத மக்கள் அனைவரும் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் மீட்கப்படுவார்கள் என்றும் இரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் உறுதியளித்துள்ளார.

author avatar
Kaliraj