கொரோனா பரவல் தடுப்பு… வழக்கு விசாரணைகள் வாட்ஸ் ஆப் காணொளிகள் மூலம்… மனு தாக்கல் இ-மெயில் மூலம் நடைபெறுகிறது…

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும்  கொடிய கொரோனா வைரஸ் தொற்றின்  காரணமாக அடுத்த மாதம் ஏப்ரல் 14-ந்தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பாரத பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். இதையொட்டி  தமிழகம் முழுவதும் அனைத்து நீதிமன்றங்களையும் 3 வாரங்களுக்கு மூடிவைப்பதாக  சென்னை உயர்நீதிமன்றம்  அறிவித்திருந்தது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை உயர்நீதிமன்ற  வழக்குகள் தற்போது வாட்ஸ் அப் காணொலி மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நீதிபதிகள் வீட்டில் இருந்தபடியே வாட்ஸ் அப் காணொலியின்  உதவியுடன் வழக்குகளை விசாரிக்கின்றனர். மேலும் வழக்கு குறித்த மனுக்களை இ மெயில் மூலம் தாக்கல் செய்யவும்  அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

author avatar
Kaliraj