கேரளாவில் கொரோனாவின் புதிய உச்சம்.. ஒரே நாளில் 1038 பேருக்கு கொரோனா

கேரளா கொரோனா தொற்றுக்களின் முதல் முறையாக 1,000 ஐ தாண்டின.

கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே செல்கிறது. கேரளாவின் இன்று 1038 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன இதனால் தற்போது மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 15,032 ஆகு உயர்ந்துள்ளது. இந்நிலையில் 8,818 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று ஒருவர் உயிரிழந்த நிலையில் மொத்த இறப்புகள் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இன்று திருவனந்தபுரத்தில் மட்டும் 276 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளன. இன்று கொரோனா பாதித்தவர்களில், 785 பேர் தொடர்பு மூலம் இருந்தவர்களும் தோற்றம் இல்லாமல் 57 பேர் பேரும் 87 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும் 109 பேர் பிற மாநிலங்களில் உள்ளவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.