மீண்டும் கொரோனா பிடியில் சிக்கும் சீனா.!? ஒரே நாளில் 108 பேருக்கு தொற்று உறுதி.!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட சீனாவின் வுகாண் மாகாணத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இருந்தும், தினமும் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 

இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதங்களாக இல்லாத வகையில் இன்று அதிகபட்சமாக 108 பேருக்கு சீனாவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 98 பேர் வெளிநாடுகளில் இருந்து சீனா வந்துள்ளவர்கள் என சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். 

அதிலும், ரஷ்ய எல்லைக்கு அருகில் ரஷ்யாவில் இருந்து சீனா வந்திருந்த 49 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால், ரஷ்ய எல்லையை மூடியது சீன அரசு. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நாளில் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் மீண்டும் சீனா கொரோனா பிடியில் சிக்கிவிடுமோ என மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.