தந்தை-மகன் கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிக்கு கொரோனா!

தந்தை-மகன் உயிரிழந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், காவலர்கள் மூன்று பேரை இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை-மகன் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி காவலர்கள் விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கு, சிபிஐக்கு மாற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுளநிலையில், டெல்லியில் இருந்து தூத்துக்குடிக்கு 8 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் வந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் இதுவரை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 15 போலீசார் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், 3 காவலர்கள் வேலுமுத்து , சாமதுரை, செல்லதுரை ஆகியோரை 5 நாட்கள் காவலில் எடுக்க சிபிஐ தொடர்ந்த மனுவில் மதுரை நீதீமன்றம் அவர்களை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில், விசாரணை குழுவில் இருந்த சிபிஐ அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் இருந்த மற்ற அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தவுள்ளனர்.

மேலும், நாளை மாலை 4 மணிக்கு வேலுமுத்து , சாமதுரை, செல்லதுரை ஆகிய மூன்று காவலர்களுக்கு சிபிஐ காவல் முடிவடையவுள்ள நிலையில், அவர்களை இன்று மாலை மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐ காவலர்கள் முடிவெடுத்துள்ளனர்.