உச்சத்தில் தலைநகர்..உக்கிரமாகும் கொரோனா!தகிக்கும் தமிழகம்

தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் உள்ள நிலையில், சுகாதாரத் துறை தற்போது வெளியிட்டுள்ளது.

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அதன்படி தமிழகத்தில் ஒரே நாளில் 2 865 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கையானது 67 ஆயிரத்து 468-ஆக அதிகரித்துள்ளதாகவும் இதில் 41 678 பேர் ஆண்கள், 25,770 பேர் பெண்கள் மற்றும் 20 பேர் திருநங்கையர் என்று தெரிவித்துள்ளது.

மேலும் இன்றைய மொத்த பாதிப்பில் வெளி்நாடுகளில் இருந்து வந்தவர்கள் 31 பேர் ஆவர். வெளிமாநிலங்களில் இருந்து வந்த 21 பேருமே தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.தலைநகர் சென்னையைப் பொருத்தவரை, ஒரே நாளில் ஆயிரத்து 654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 45,814-ஆக அதிகரித்துள்ளது.

இத்துடன், சென்னையைத் தவிர பிற மாவட்டங்களிலும் தொடர்ந்து 5வது நாளாக ஒரே நாளில் 1000க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்  தமிழகத்தில் ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 25பேரும், தனியார் மருத்துவமனைகளில் 8 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் தெரிவித்த சுகாதாரத்துறை தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு தற்போது 866ஆக அதிகரித்து உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாயிரத்து 424 பேர் குணமடைந்து விட்டதாகவும்,அதில் இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 37,763ஆக அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளது.

author avatar
kavitha