பல விதமான கடுமையான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டிய சூழ்நிலை வரலாம் என்று இங்கிலாந்து பிராத்தமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, ரஷ்யா, போன்ற நாடுகள் உள்ள நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பிரிட்டனில் அதிக அளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அதிகம் வீரியமிக்க புதிய வகை வைரஸ் அங்கு தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சில வாரங்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் என ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன், வைரஸ் பாதிப்பு மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
வரும் வாரங்களில் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக படலாம் என்றும் எச்சரித்தார். அடுத்த சில வாரங்களில் நாம் கடினமான காரியங்களை செய்ய வேண்டியிருக்கலாம் என்றும், பல விதமான கடுமையான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டிய சூழ்நிலை வரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…