Corona update : 2020-குள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்து விடலாம் !

2020 முடிவதற்குள் கொரோனா நடுப்பு மருந்தை கண்டு பிடித்து விடலாம் என்று சுவிஸ் விஞ்ஞானி மார்ட்டின் பேச்மேன்  என்பவர் அறிவித்துள்ளார்.

உலகளவில் கொரோனா வைரசால் இதுவரை 27,48,938 பேர் பாதிக்கப்பட்டு, 1,92,153 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 7,57,634 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் மட்டும் 23077 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 718  பேர் உயிரிழந்துள்ளனர். 4749 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில், கொரோனாவை அழிப்பதற்கு பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகின்ற நிலையில் தற்போது சுவிஸ் விஞ்ஞானி மார்ட்டின் பேச்மேன்  என்பவர் இந்தாண்டு முடிவதற்குள் தடுப்பூசி கண்டுபிடத்து விடலாம் என்று கூறியுள்ளார். கொரோனாவிற்கு எதிராக மற்றொரு வைரஸை உருவாக்கி அதன் மூலம் அழிப்பது தான் தடுப்பூசியின் திட்டமாக கூறியுள்ளார்.

author avatar
Vidhusan