மகாராஷ்டிராவில் அதிகாரிக்கும் கொரோனா.. ஒரே நாளில் 7,827 பேருக்கு கொரோனா!

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 7,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான

By surya | Published: Jul 12, 2020 07:27 PM

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 7,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2.54 லட்சமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் அங்கு இதுவரை இல்லாத அவளாக, இன்று ஒரே நாளில் 7,827  பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,54,427 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 396 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,289 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,340 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,40,325 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 55.15 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி, மகாராஷ்டிராவில் 1,03,516 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

Step2: Place in ads Display sections

unicc