கோயம்பேடு மார்க்கெட்டில் விதியை மீறிய கூட்டம் கூட்டமாக நிற்கும் மக்கள் !

முழு ஊரடங்கு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் விதியை மீறிய கூட்டம் கூட்டமாக நிற்கும் மக்கள்.

கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் உயரந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் 24506 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 775 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது தமிழக அரசானது அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னை, கோவை, திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளனர். இதனால்,  இன்று மாலை 3 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் மக்கள் அனைவரும் கடைகளின் முன் கூட்டம் கூட்டமாக நின்று மூன்று நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு செயல்பட இருப்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் முகக்கவசம் அணியாமலும் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டம் கூட்டமாக அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

author avatar
Vidhusan