ஆந்திராவில் பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா குமார், கொரோனா குமாரி என பெயரிட்ட பெற்றோர்கள்!

முதலில் சீனாவை தாங்கிய கொரோனா வைரஸ் அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இதனையடுத்து, இந்த வைரஸ் நோய் தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்கி வருகிறது. இந்த நோயினால் லட்சக்கணகானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 இந்நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் வேம்பள்ளி மண்டலத்தில் இருக்கும் தாலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சசிகலா, அபிரெட்டி கிராமத்தை சேர்ந்த ரமா தேவி ஆகியோர் பிரசவத்திற்காக வேம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 இதனையடுத்து, சசிகலாவுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு கொரோனா குமார் என்றும், ரமாதேவிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு கொரோனா குமாரி என்றும் பெற்றோர்கள் பெயர் சூட்டினர். மேலும் பலர் இந்த கொரோனா வைரஸின் பெயர்களை வைத்துள்ளனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.