கேரளாவில் இன்று 1,212 பேருக்கு கொரோனா..5 பேர் உயிரிழப்பு.!

கேரளாவில் இன்று 1,212 பேருக்கு கொரோனா..5 பேர் உயிரிழப்பு.!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,212 பேருக்கு கொரோனா.

கேரளாவில் இன்று 1,212 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இன்று 5 பேர் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து 880 பேர் குணமடைந்தனர். இதுவரை 24,922 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மூணாறு நிலச்சரிவில் இறப்பு எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது மேலும் மூன்று உடல்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் உள்ளன. மேலும்கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று  குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டியளித்தார்.