கொரோனா விவகாரம்… சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் பேரவைகளுக்கு செல்ல வேண்டாம் கொறடா உத்தரவு…

இந்தியாவில் ‘கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், பாராளுமன்றம் மற்று சட்டமன்ற கூட்டத்தொடரில் எம்பி, எம்.எல்.ஏக்கள் பங்கேற்க வேண்டாம்’ என, பல்வேறு கட்சிகளின்  சார்பில் அந்த கட்சியினருக்கு  உத்தரவிட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வர வேண்டாம் என்று திமுக கட்சி கொறடா திரு. சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார். எனவே  கொரோனா பரவல் காரணமாக வெளிமாவட்ட எம்எல்ஏ-க்கள் வர வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல்., திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில், லோக்சாபாவில், 22 எம்.பி.,க்களும், ராஜ்யசபாவில், 13 எம்.பி.,க்களும் உள்ளனர்.

Image result for கொரொனா பரவல் பாராளுமன்றம்

பார்லி.,யில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடரின், இரண்டாம் அமர்வு நடைபெறுகிறது. இந்நிலையில், ‘கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், திரிணமுல் காங்., – எம்.பி.,க்கள், லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம்’ என, கட்சி மேலிடம் உத்தரவிட்டு உள்ளது. 

author avatar
Kaliraj