அண்ணனுக்கு கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட கங்குலி..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்பொழுது பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி மேற்கு வங்க மாநிலம் பெகலாவில் உள்ள தனது முன்னோர்கள் வீட்டில் வசித்து வந்தார், இந்நிலையில் அவருடைய மூத்த சகோதரரும் பெங்கால் கிரிக்கெட் சங்க இணை செயலாளருமான ஸ்னேகாசிஷ் மொமின்பூரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கங்குலிக்கு சொந்தமான தொழிற்சாலைகளுக்கு அவருடடைய சகோதரர் தினமும் சென்று வந்ததால் திடீரென அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது , இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்,மேலும் கங்குலியின் அவருடைய சாதோருடன் இருந்ததால் அவரையும் தனிமை படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கங்குலி கூறுகையில் ‘உலகெங்கிலும் உள்ள இந்த சூழ்நிலை என்னை மிகவும் பாதித்தது. இது எப்படி, எப்போது, எங்கிருந்து வந்தது என்பது நமக்குத் தெரியாது. அதனால் நாம் தயார் நிலையில் இல்லை’ என்றும் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.