முதல் நாள் பள்ளிக்கு வந்த 10 ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று…!

நாமக்கல் மாவட்டத்தில் முதல் நாள் பள்ளிக்கு சென்ற 10 ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா பரவல் தற்பொழுதும் தொடர்ந்து பரவி கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதியிலிருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. மேலும்,  பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்கள் முறையாக கொரோனா கட்டுப்பட்டு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த அரசு பள்ளிக்கு முதல் நாள் வருகை தந்த மாணவ மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் இருந்த ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த மாணவியுடன் தொடர்பிலிருந்து அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மாணவி பயின்ற வகுப்பறையும் மூடப்பட்டுள்ளதுடன், கிருமி நாசினி கொண்டு வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவிக்கு லேசான தொற்று அறிகுறியே இருந்ததால், வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

author avatar
Rebekal