பிறந்து 27 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி…!

  • ஒரு தம்பதியினருக்கு கடந்த மாதம் 7-ம் தேதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
  • பிறந்து 27 நாள்களான குழந்தைக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் 2-வது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இடைச்செவல் கிராமத்தினை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த மாதம் 7-ம் தேதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. சில தினங்களில் குழந்தை மற்றும் குழந்தையின் தாய் வீடு திரும்பிய நிலையில், குழந்தையின் தாத்தாவிற்கு லேசான காய்ச்சல் அறிகுறி இருந்துள்ளது.

இதனையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, வில்லிசேரி ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக கடந்த 2-ம் தேதி வீட்டில் உள்ளவர்கள் அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், பிறந்து 27 நாள்களான குழந்தைக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, குழந்தை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு அரசு மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.