அமெரிக்காவில் இதுவரை 7,00,000 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு.!

அமெரிக்காவில் கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து  இன்று வரை கிட்டத்தட்ட 700,000 குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்னர் என்று ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.

அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சங்கம்  நேற்று வெளியிட்ட அறிக்கையில், செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 8 வரை மொத்தம் 77,073 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளன, இது இரண்டு வாரங்களில் 13 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 0.9 சதவீதம் முதல் 3.6 சதவீதம் வரை உள்ளனர், மேலும் அனைத்து கொரோனா இறப்புகளில் 0 முதல் 0.23 சதவீதம் வரை உள்ளனது.

உலகின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா இருப்பதால் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்புகள் அதிகம்.

தற்போது, வியாழக்கிழமை காலை நிலவரப்படி, நாட்டில் மொத்த கொரோனா எண்ணிக்கை 7,911,497 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 216,734 ஆகவும் அதிகரித்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.