சீனாவில் தானியங்கு இயந்திரம் மூலம் பேக் செய்யப்பட்ட பாக்கெட்டுகளில் கொரோனா!

சீனாவின் வடக்கு சீனாவின் ஜின்செங், வடக்கு சீனாவின் ஷாங்க்க்ஷி மாகாணம் ஆகிய இடங்களில் இருந்து தானியங்கி கருவிகள் மூலம் பேக் செய்யப்பட்ட பாக்கெட்டுகளில் கொரோனா தொற்று.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் முதன் முதலில் பரவியது சீன நாட்டில் தான். இதனை அடுத்து, சீனாவில் தொடர்ந்து இந்த வைரஸ் பரவி வருகின்ற நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சீனாவின் வடக்கு சீனாவின் ஜின்செங், வடக்கு சீனாவின் ஷாங்க்க்ஷி மாகாணம் ஆகிய இடங்களில் இருந்து தானியங்கி கருவிகள் மூலம் பேக் செய்யப்பட்ட பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டது. அதில் கொரோனா வைரஸ் இருப்பதை சீனாவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் கடந்த சனிக்கிழமை உறுதிப்படுத்தியது.

இதனையடுத்து, தொற்றுள்ள பொருட்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட யாருக்கும் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. அத்துடன் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.