பாட்னாவில் 2 மருத்துவமனைகளில் 500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா ..!

பாட்னாவில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் 500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அவசர மருத்துவ சிகிச்சை பெற கொரோனா நோயாளிகள்  வரிசையில் நிற்கிறார்கள். முதல் கொரோனா வைரஸ் அலையுடன் ஒப்பிடும்போது, இரண்டாவது அலை கொரோனாவால் ​​சாதாரண மக்கள் மட்டுமல்ல, மருத்துவர்களும், சுகாதார ஊழியர்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள இரண்டு முன்னணி மருத்துவமனைகளில் 500 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு மருத்துவமனைகளில் ஓன்று எய்ம்ஸ் மருத்துவமனை மற்றோன்று பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகும்.

பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில்  மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 384 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கண்காணிப்பாளர் தெரிவித்தார். பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், 70 மருத்துவர்கள், 55-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

author avatar
murugan