ஒரே பள்ளியில் 60 மாணவர்களுக்கு கொரோனா…! மாணவர்களை வீட்டிற்கு அழைத்து சென்ற பெற்றோர்..!

கர்நாடகாவில், ஆனோக்கல் பகுதியை சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கியிருந்த 60 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி இந்தியா முழுவதும், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தொற்று பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, சில மாநிலங்களில் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கர்நாடகாவில், ஆனோக்கல் பகுதியை சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு அடுத்ததடுத்து உடனலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது, 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 14 மாணவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இந்த தகவல் வேகமாக பரவ, அந்த விடுதியில் தங்கி பயின்ற மாணவர்களை பெற்றோர் அவசர அவசரமாக வந்து அழைத்து சென்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.