ஒரே கிராமத்தில் 23 பேருக்கு கொரோனா.. எல்லையை மூடிய சுகாதாரத்துறை அதிகாரிகள்!

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகேயுள்ள ஊட்டத்தூர் என்ற கிராமத்தில் 23 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, அந்த பகுதி நோய் தொற்று பகுதியாக அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக, சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், இம்மாத இறுதிவரையுள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்தது. இந்தநிலையில் அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3,289 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு கொரோனா தொற்றால் இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்தவகையில், திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகேயுள்ள ஊட்டத்தூர் என்ற கிராமத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த கிராமத்திற்கு விரைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், அந்த கிராமத்தை கொரோனா தொற்று பகுதியாக அறிவித்து, கிராம எல்லைகளை மூடி, அந்த கிராமத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.