எச்சரிக்கை : கொரோனா.., டெங்கு.., பன்றிக்காய்ச்சல்..! கோவையில் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதி..!

கோவையில் இரண்டு பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதியாகியுள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

கோவை : தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வருடமாக கொரோனா தொற்று பரவி வந்த நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதால் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால், டெங்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் சில இடங்களில் டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கோவையில் இரண்டு பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதியாகியுள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் கோவை மாநகராட்சி உள்ள அனைத்து பொதுமக்களும் வெளியில் வரும்போது மகன் கவசம் அணிய வேண்டும். வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும் மற்றும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும், காய்ச்சல், இருமல், தலைவலி போன்ற ஏதேனும் அறிகுறி இருப்பின் ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி உடனடியாக சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தி உள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.