கொரோனா பாதித்த பெண்ணின் இறுதிச்சடங்கிற்கு சென்ற 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

தானேவுக்கு அடுத்த உல்ஹாஸ்நகர் நகரில் கொரோனா பாதித்த பெண்ணின் இறுதிச்சடங்கில்

By manikandan | Published: May 31, 2020 05:26 PM

தானேவுக்கு அடுத்த உல்ஹாஸ்நகர் நகரில் கொரோனா பாதித்த பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்றதால், 18 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. 

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானேவுக்கு அடுத்த உல்ஹாஸ்நகர் நகரில் 40வயது பெண் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அப்பெண்ணிற்கு கொரோனா இருப்பது உறுதியானது. 

இதனால், கடந்த மே 25ஆம் தேதி அப்பெண்ணின் உடலை உரிய பாதுகாப்பு வசதிகளோடு அடங்கிய பெட்டியில் வைத்து குடும்பத்தாரிடம் கொடுத்துள்ளனர். 

ஆனால், உறவினர்கள் அப்பெண்ணின் உடலை வெளியே எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், இறுதிச்சடங்கில் பங்கேற்ற 70 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், 18 பேருக்கு கொரோனா இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. 

Step2: Place in ads Display sections

unicc