கேரளாவில் ஒரே நாளில் 225 பேருக்கு கொரோனா உறுதி – அமைச்சர் ஷைலஜா

இன்று ஒரே நாளில் கேரளாவில் 225 பேருக்கு கொரோனா உறுதி.

இந்நிலையில் இன்று கேரளாவில் மேலும் 225 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அங்கு இதுவரை 3,174 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர. மேலும் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதரதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் மருத்துவமனையில் 2,228 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அம்மாநில சுகாதாரதுறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்தார்.

மேலும் இன்று கேரளாவில் கேரளாவில் லாக்வுடன் விதிமுறைகள் ஜூலை 2021 வரை நீட்டிப்பு என அறிவித்துள்ளது. இந்தியாவில் முதல் மாநிலமாக கேரளாவில் லாக்டவுன் விதிமுறைகள் ஓராண்டுக்கு நீட்டிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஓராண்டிற்கு மக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் எனவும் பணியிடங்களில், பேருந்துகளில், வாகனங்களில் பயணிக்கும் போது மாஸ்க் அணிவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக அடுத்த ஓராண்டில் எந்த விதிமான போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதியில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.