சர்ச்சைக்குள்ளான தனிஷ்க் நகைக்கடை விளம்பரம்! இணையத்தில் ட்ரெண்டாகும் ஹேஸ்டாக்!

தனிஷ்க் நகைக்கடையின் விளம்பரம் ஒன்று சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.

பிரபல டைட்டன் குடும்பத்தை சேர்ந்த, தனிஷ்க் நகைக்கடையின் விளம்பரம் ஒன்று சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த நகைக்கடை வெளியிட்டுள்ள விளம்பரமானது, இந்து மதத்தை சேர்ந்த தனது மருமகளுக்கு, முஸ்லீம் மதத்தை சேர்ந்த அவரது மாமியார் வளைகாப்பு நடத்துவது போன்ற விளம்பரத்தை, கடந்த வாரம் தனிஷ்க் நிறுவனம் வெளியிட்டிருந்தது.

இந்த விளம்பரமானது லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கும் விதத்தில் உள்ளதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், ட்வீட்டரில் பாய்காட் தனிஷ்க் என்ற ஹேஸ்டாக் டிரெண்ட்  ஆனதையடுத்து, விளம்பரத்தை யூடியூப்பில் இருந்து தனிஷ்க் நிறுவனம் நீக்கிவிட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், இந்து-முஸ்லீம் ஒற்றுமையை விளக்கும் வகையிலான விளம்பரத்தை நீக்கியதற்காக கண்டனம் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.