எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி… 2 மணிநேரமாக நீடிக்கும் ஆலோசனை!

எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதில் அதிமுகவில் தொடர் இழுபறி நீடிக்கும் நிலையில், அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியா? ஓ.பன்னீர்செல்வமா? என்பதை தேர்வு செய்வதற்கான ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், இன்று மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2 மணி நேரமாக நடந்து வரும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், எதிர்க் கட்சித் தலைவரை தேர்வு செய்வதில், ஓ.பி.எஸ் – இ.பி.எஸ். இருதரப்புக்கு இடையே தொடர்ந்து போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.

இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 2 மணி நேரமாகியும் முடிவு ஏதும் எடுக்க முடியாமல் தொடர் இழுபறியில் இருந்து வருகிறது.  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடைய வாக்குவாதம் நிலவி வருவதால், எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய முடியாமல் அதிமுக எம்எல்ஏக்கள் திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருப்பதாகவும், ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அதனை விட்டுக்கொடுக்க மறுப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, அதிமுக எம்எஸ்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வரும் அக்கட்சி அலுவலகம் முன்பு ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே மோதல் ஏற்படலாம் என்பதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் 4 மணிநேரமாக நீடித்தும், எதிர்க்கட்சி தலைவர் யார் என்று முடிவு எட்டாத நிலையில், இன்று மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

5 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

11 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

12 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

14 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

15 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

15 hours ago